how to avoid memory loss in tamil | ஞாபக மறதி

 ஞாபக   மறதியை   தவிர்ப்பது   எப்படி 


how to avoid memory loss in tamil


முன்னுரை

“ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் “ 

என்பது பழமொழி. இந்த பழமொழிக்கேற்ப நாம் நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கு நமது உடல் நலனை அக்கறையோடு பேணி பாதுகாப்பது என்பது, இன்றைய நடைமுறையில் மிகவும் அவசியமானதாகும்.


ஞாபக மறதி என்றால் என்ன ?

அசாதாரணமான முறையில் அனைத்தையும் மறப்பதுதான் ஞாபகமறதி எனப்படுகிறது. நமது உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு நமது அக்கறையின்மைதான் காரணம்

நமது தலைமுடிக்கூட நாம் அழுத்தி சீவினால்தான் அடங்கும்அதுபோல, நம் உடல்நலனில் நாம் அக்கறை எடுத்துக்கொள்ளாவிட்டால், அது நிச்சயமாக நமக்கு கேடு விளைவிக்கும்நம்முடைய அவசர வாழ்க்கை முறையினாலேயே  நமக்கு பல நோய்கள் ஏற்படுகின்றதுநமது உடல் நலனை பேணி பாதுகாக்க வேண்டியக் கடமை, மிகவும் இன்றியமையாதது.

 

ஞாபக மறதி ஏற்படுவதற்கான மிக முக்கியக் காரணங்கள்


  • மறதி ஏற்படுவதற்கான காரணங்களை முதலில் காணலாம் :
  • தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது.
  • கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது.
  • நாம் தற்பொழுது எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவுகள்.
  • முக்காடுப் போட்டுத் தூங்குவது.
  • மது அருந்துதல்.
  • புகைப்பிடித்தல்.
  • உடல்நலக் குறைவோடு வேலை செய்தல்.
  • மூளை சம்மந்தப்பட்ட நோயினால் அவதிப்படுவது.
  • மன அழுத்தம்.
  • வயது முதிர்ச்சியும் ஒரு காரணம்.
  • தொடர்ச்சியான தலைவலி.
  • மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவில் குறைபாடு.
  • மிக மோசமான நரம்பியல் கோளாறுகள்.
  • வைட்டமின் பி 12 குறைபாடுகள்.
  • உணர்ச்சிவசப்படுவது.
  • மூளையில் அறுவை சிகிச்சை செய்திருப்பது.
  • இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது.
  • புற்று நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பது.
  • தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கோளாறுகள்.
  • உயர் ரத்த அழுத்தம்.
  • எதற்கெடுத்தாலும் பதட்டப்படுவது.
  • மூளையில் கட்டி இருப்பது.
  • கடுமையான மூளைத் தொற்றினால் அவதிப்படுவது.


ஞாபக மறதியை  நமக்கு உணர்த்தும் அறிகுறிகள்

கீழ்காணும் அறிகுறிகள் தென்பட்டாலே நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

  • சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வது.
  • அண்மையில் நடந்த நிகழ்வுகளைக் கூட மறந்துவிடுவது.
  • நன்கறிந்த வேலைகளைச் செய்யக்கூட தடுமாறுவது.
  • சாதாரணமாக பேசும்போது குழறுவது  அல்லது  திக்குவது .
  • அடிக்கடி நம்முடைய  மனநிலையில் மாற்றம் ஏற்படுவது.
  • பிரச்சனைகளுக்கு தப்பான தீர்வுக் காண்பது.
  • சமீபத்தில் நாம் பார்த்தத்தையோ, படித்ததையோ மறந்துவிடுவது.
  • உணர்ச்சிவசப்படுவது.
  • மூளையில் அறுவை சிகிச்சை செய்திருப்பது.
  • இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது.
  • புற்று நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பது.
  • தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கோளாறுகள்.
  • உயர் ரத்த அழுத்தம்.
  • எதற்கெடுத்தாலும் பதட்டப்படுவது.
  • கவனம் சிதறுவது.
  • எக்காரியத்திலும் தவறான பங்கேற்பு.
  • பழைய நினைவுகளை சுத்தமாக மறப்பது.

 

ஞாபக மறதியை  எதிர்கொள்ள  எளிய நெறி முறைகள் 


சில எளிமையான வழி முறைகளைக் கடைப்பிடிப்பதன்மூலம் நாம் நல்ல ஞாபக சக்தியுடன் ஆரோக்கியமாக வாழலாம்.


  • மிகவும் சத்தான உணவுகளை சாப்பிடுவது.
  • கட்டாயமாக  மாதுளம்பழத்தை அன்றாடம் உட்கொள்வது.
  • எட்டு மணிநேர கவலையற்ற, நிம்மதியான தூக்கத்தை பின்பற்றுவது.
  • தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக மின் உபகரணங்களை பயன்படுத்தாமல் இருப்பது.
  • எளிமையான உடற்பயிற்சியை அன்றாடம் மேற்கொள்வது.
  • உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்வது.
  • தினமும் சிறிது நேரமாவது தியானம் செய்வது.
  • மது அருந்தாமல் இருப்பது.
  • புகை பழக்கத்தை அடியோடு விட்டுவிடுவது.
  • மூளைக்கான சிறப்புப்  பயிற்சிகளை மேற்கொள்வது.
  • நமது உடலில் வைட்டமின்  டி அளவினை அதிகரித்துக்கொள்வது.
  • நாம் உட்கொள்ளும் உணவுகளில் சர்க்கரையின் அளவைக் குறைத்துக்கொள்வது.
  • நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வது.
  • மன அழுத்தத்தை முற்றிலும் குறைத்துக்கொள்வது.
  • நமது உடலில் ஏற்கனவே உள்ள நோய்களுக்கு, நமது குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை, நேரம் தவறாமல் எடுத்துக்கொள்வது.
  • நாம் குடிக்கும் தண்ணீரின் அளவை சிறிது சிறிதாக அதிகப்படுத்துவது.
  • நம்மால் முடிந்த யோகாசனப் பயிற்சிகள் மேற்கொள்வது.
  • நம்மை சுற்றியுள்ள இயற்கையை மனதார ரசிப்பது.
  • அன்றாடம் முப்பது நிமிடமாவது நடைபயிற்சி செய்வது.
  • நம் குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிடுவது.
  • எப்போதும் நம்மை,  நல்ல பயனுள்ள விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்வது.
  • கவலைகளை மறந்து சிறிது நேரமேனும் மனம் விட்டு சிரிப்பது.
  • நமது எதிர்கால இலக்குகளை அடைவதைப்பற்றி ஆழமாக  சிந்திப்பது.
  • நண்பர்களுடன் மனம் மகிழ சிரித்துப் பேசி நிம்மதியாக இருப்பது.
  • நல்ல சீரான உணவு முறையைப் பின்பற்றுவது.
  • மனதை சந்தோஷமாக வைத்திருப்பது.
  • எப்போதும் புத்துணர்ச்சியுடன், சிரித்தமுகத்தோடு இருப்பது.
  • விடாமுயற்சியுடன் செயல்படுவது.
  • ஆழமான மூச்சுப் பயிற்சிகளை செய்வது.
  • இயற்கையோடு ஒன்றி வாழ்வது.


எந்தெந்த உணவுகள் மறதியைக் கட்டுப்படுத்தும் ?


  • பச்சைக் காய்கறிகள் - கேரட்பீன்ஸ்ப்ரோகோலிவெண்டைக்காய்அவரைக்காய்முருங்கைசொவ் சொவ்புடலங்காய்பெங்களூரு கத்தரிக்காய்பூசணிக்காய்முட்டை கோஸ் போன்றவை.
  • கீரை வகைகள் - வல்லாரை கீரைமுளைக்கீரைசிறுகீரைஅரைக்கீரைமுருங்கைக்கீரை முதலியன.
  • மீன் வகைகள்.
  • தானியவகைகள். - மக்காச்சோளம்சாமைகேழ்வரகுதினைபனிவரகுகுதிரைவாலிகோதுமைவார்கோதுமைகம்புபொட்டுக்கடலைமைசூர் பருப்புகாராமணிசுண்டல்பாசிப்பயிறுகொண்டைக்கடலைகருப்பு உழுந்துபச்சை பட்டாணிஎள்ளுசோயா போன்றவைகளாகும்.

  • ஆலிவ் எண்ணெய்.
  • கோழிக்கறி.



எந்தெந்த உணவுகளை அறவே தவிர்க்கவேண்டும் ?

  • அனைத்து இனிப்பு வகைகள். (ஏனெனில் அவை நம் உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும்). 
  • வெண்ணெய், மற்றும் வெண்ணெய் கலந்த உணவுகள்.
  •  போன்றவையாகும்)
  • சிவப்பு இறைச்சி.
  • துரித உணவுகள் (பர்கர், பிஸ்சா, இதர சிற்றுண்டிகள்).

  • வறுத்த உணவுகள் (வறுத்த மீன்கள், சமோசா,உருளைக்கிழங்கு வறுவல், சேவல்கள்

 

முடிவுரை

மேற்கூறிய எல்லா ஆலோசனைகளையும் நாம் அனைவரும் தவறாமல் பின்பற்றினாலே, மிகச்சிறந்த ஞாபக சக்தியுடன், நோய் நொடியின்றி நாம் அனைவரும் இனிதே வாழலாம்.

Post a Comment

0 Comments